Tuesday, 17 November 2015

Rescue operation in Flood by Mr.C.Sylendra Babu(ADGP) | Chennai flood

Kaalangal Thorum - Kungumam Tamil Song - Sivaji Ganesan

N S Krishnan - Enge Theduven - எங்கே தேடுவேன்

Mudhal thethi NSK hit.mp4

ஒரு குட்டி கதை..... ( படித்ததில் பிடித்தது )


ஒரு ஊரில் பெரிய கோயிலில்
கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,
திடீரென்று கோயிலில் திருப்பணி
நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன
வழியில் ஒரு
தேவாலயத்தை கண்டன
அங்கு சில
புறாக்கள்
இருந்ததன
அவைகளோடு இந்த
புறாக்களும்
அங்கு குடியேறின.
சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்
வந்தது.
தேவாலயம் புதுப்பிக்க தயாரானது
இப்போது இங்கு
இருந்து சென்ற
பறவைகளும் அங்கு
இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .
வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின
சில நாட்கள்
கழித்து
ரமலான் வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று
இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின.
கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு குஞ்சுப்புறா
தாய் புறாவுடன்
கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...
அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம்
இங்கு இருந்த போதும்
புறா தான்,
தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,
மசூதிக்கு போன போதும் புறா தான் ",
"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால்
இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;
குழம்பிய குட்டி புறா
"அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறா
தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.
அதற்கு தாய் புறா
"இது புரிந்ததனால்
தான் நாம் (கோபுரத்திற்க்கு) மேலே இருக்கிறோம்,
இவர்கள் கீழே
இருக்கிறார்கள்" என்றது..

Tuesday, 10 November 2015

காந்தியின் பிற்போக்கு கருத்துக்களை இன்று முற்போக்காக மாற்றியது யார் ?


ஆரம்பகாலத்தில் தொடர்வண்டி, அலோபதி என்று கூறப்படும் நவீன மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளை காந்தி எதிர்த்தார். அவை இன்று பிற்போக்கான கருத்தாக தோன்றினாலும் அக்கருத்தோடு உடன்பட்டு சற்று சிந்திக்து பார்த்தேன்.
.
மக்கள் தொகைமிகுந்த இந்திய நாட்டு மக்களின் உழைப்பை மழுமையாக பயன்படுத்தி, அனைவருக்கும் வேலை உண்டு என்ற நிலை ஏற்படுத்தினால் இந்தநாட்டிற்கு தேவையான அனைத்தும் உற்பத்தி செய்ய முடியும். அப்படிப்பட்ட சமூக அமைப்பு எப்படி இருக்கும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க கூட தெரியவில்லை. கருத்தாலும் கரத்தாலும் உழைக்க மக்கள்தொகையை  பெற்றிருக்காத நாடுகளில் உற்பத்தியை பெருக்கி வியாபாரம் செய்ய பல தொழிற்சாலைகள் தேவைப்படலாம். தன்னிறைவு உள்ள சமூகமாக இருக்க நமது நாட்டின் மக்கள் சக்தியே போதும் என காந்தி கருதியுள்ளார்.

பொருள் உற்பத்தியில் உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பிற்காகவும் உடல் சக்திக்கு மீறிய வேலைகளில் ஈடுபடத் தேவைப்படும் கருவிகள், சாதனங்கள், சிறிய இயந்திர தொழிற்கூடங்கள் அமைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்திய நாட்டில் புராதன மருத்துவ முறைகள் பல உள்ளன. இவை இந்த மண்ணிற்கு உரிய மருத்துவ மரபுகளை கொண்ட மருத்துவ மாண்பு கொண்டுள்ளவை. அந்த மருத்துவ மரபுகளை அழித்துவிட்டு முற்றிலும் வணிக லாபத்திற்காக மனிதப்பார்வை இல்லாமல் கருவிகளின் மொழியில் நோய்களை கணித்து இரசாயன மருந்துகளை மட்டும் பயன்படுத்தும் நிலையை கட்டாயப்படுத்தும் அலோபதி என்ற நவீன மருத்துவத்துறையை நாமும் ஏற்க முடியவில்லை.

சிறிய கிராமம் என்றாலும் அதில் உள்ள மக்கள் அங்குள்ள நிலத்தை பதப்படுத்தி உழுது பயிரிட்டு விவசாயம் செய்து உணவு உற்பத்தியில் ஈடுபட்டு தன்னிறைவு பெற்று வந்த நிலை மாறியது. அவர்களின் நிலம் பெருமுதலீட்டளர்களால் பறிக்கப்பட்டு நிராதரவாக நின்றனர். தங்களின் உழைப்புத்திறனை வெளிப்படுத்திட தேவையான கருவிகளை இழந்தனர். இந்த நிலையை உருவாக்கியபின்னர் அவர்கள் தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள அங்கேயே போராடுவதற்கு பதிலாக ஊரைவிட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து அண்டி வாழ வழிவகுத்தது தொடர்வண்டி வசதி.

அதிவேக போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டப் பின்னர் மக்கள் தினமும் நகருக்கு சென்றுவர வசதிகள் உண்டானது. அந்த வசதி பாமர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கோ வசிதிக்காகவோ உருவாக்கப்படவில்லை. இவர்களின் பயணத்தின் மூலமாக பெரிய தொழில்வணிக நிறுவனங்கள் .நகர்களில் நடத்தும் நவீன தொழில்களுக்கு இந்த பாமர மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய ஊதியம் உறைவிட வசதி உடைகள் எதுவும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு ஏழை உழைப்பாளிகள் தங்களே தாங்களே பக்குவப்படுத்தி மாற்றிக் கொண்டார்கள்.

தொடர்வண்டிகள் அதிகமாக அதிகமாக கிராமத்து மக்களை நகர்புறங்களுக்கு கொண்டுவந்து குவிக்கும் பணியை தொடர் வண்டி வசதி உருவாக்கிவிட்டது. கிராமத்தில் சிறுதொழில்கள் மருத்துவ அறிவு, மக்களுக்கான வேலைவாழ்ப்பின் ஊற்றுக்கண்கள் அடைபக்கப்பட்டன. கிராமத்து மக்கள் வெளியூர் சென்று சம்பாதித்து கொண்டுவரும் பணத்தை பயன்படுத்த, அங்கே பொருள் வியாபாரம் மட்டும் நிதானமான வளர்ச்சி பெறுகிறது.

நகரில் உள்ள பெரிய தொழிலுக்கு தேவைப்படும் திறமையை கற்று பயிற்சி பெற  கல்விக்கூடங்கள் சிறிய அளவில் புறநகர்களில் உள்ளூரில் உள்ள சிறிய முதலீட்டாளர்களால் நடத்தப்படுகின்றன. அந்த கல்வி உள்ளூர் மக்கள் வாழ்க்கைமுறை மற்றும் சமூகச்சூழல் மாற்றத்தைப்பற்றி சிந்திக்க ஊக்குவிப்பதாக இருப்பதில்லை.பிழைப்புக்கு வழி காட்டுகிறது.

தூரத்து தொடர்வண்டி, ,அயல்நாட்டு நவீன மருத்துவம் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தையும் காந்தி மறுத்தார். 

இந்த கருத்து நவீன அறிவியலுக்கு எதிரானதாக இருக்கிறது .என நாம் கருத வேண்டியுள்ளது. அதேசமயம் நமது நாட்டில் இந்த நவீன வளர்ச்சிகள் மக்கள் நலனுக்கும் சமூக வளர்ச்சிக்கு ஏதிராக உருவாக்கப்படுகிறது என பார்க்க முடிகிறது. 

நவீன பொருளாதார கொட்பாடுகளாக இந்திய அரசுகள் கொண்டுவரும் திட்டங்களில், அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களின் மிருக வெறியோடு லாப வேட்டை நடத்துவதாக உள்ளது. இந்தியமக்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்துவிடும் என்று அஞ்சத்தக்க வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. வேலை வாய்புகள் அழிக்கப்படுகிறது. கல்வியின் தன்மை அவர்களுக்கு தேவைப்படும் முறையில் கற்பிக்கப்படுகிறது. 

அந்நிய நாட்டு முதலீட்டால் இந்திய நாட்டு சிறு முதிலீட்டாளர்கள், வியாபாரிகள், உள்ளூர் தொழில்கள் அனைத்தும் அழிகப்படும் நிலை உருவாகிறது. இதனை இடையூறின்று நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை மத்தியில் ஆளும் ஆட்சியாளர் உருவாக்கித் தருகிறார்கள். மக்கள் மனங்களை இருட்டில் வைக்கும் பணியை மாநில அரசுகளை ஆள்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த தகுதிக்கு உரியவர்களை ஆட்சியில் அமர்த்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பல கோடி ரூபாய் செலவிட முன்வருகின்றன. அந்த கோட்பாடுகளையும், கொள்கைகளையும் எதிர்க்கும அரசியல் இயக்கங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்ப பல ஊடகங்களுக்கு உதவியும் செய்கிறார்கள்.

படித்தவர்களும் பாமர மக்களும் இந்த கருத்துக்களை நம்பி ஏமாறும் நிலையில்தான் உள்ளனர். அதனை எதிர்க்கும் ஆற்றலும் பலமும் மக்கள் சக்தியிடம் மட்டுமே உள்ளது. அதற்கான அடிப்படையான கோட்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை இந்திய படிப்பாளிகள் மற்றும் படைப்பாளிகள் செய்ய வேண்டி உள்ளது. மக்களுக்கு விழப்புணர்வு ஏற்றபட அவர்களுக்கு  புரியும்படி அந்த செயலை எப்படி செய்வது என்ற வெளிப்படுத்தும் வடிவம் தெரியாமல் பல முற்போக்கு படைப்பாளிகள் உள்ளனர். 

முற்போக்கு படைப்பாளிகள் எதிரியை சாடுவதும் பழிப்பதும் குறை கூறுவதை மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவை மக்களுக்கு அனுபவப்பூர்வமாக ஏற்கெனவே தெரிந்தவை என்பதால் அவர்கள் வெறும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு செவிமடுப்பதில்லை.

பாமர மக்கள் தங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள தெரியாமல் பொது புத்தியை மூடநம்பிக்கையால் நிறைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வாழ்க்கை முறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ஆழ்மனதையும் மூளையையும் உலுக்கி அசைக்கும் வடிவில் மாற்று பாதையை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.


கோ.சுரேந்திரபாபு செல்பேசி 9444468670 email:friendsurender@gmail.com


    
வணக்கம் முகநூல் பதிவில் விளக்கமான தகவல்களை தர இயலாத  நிலையில் உங்களை என் பதிவுப்பக்கதிற்கு அழைத்துள்ளேன்.உங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து என் படைப்புகளை படித்து கருத்து கூற வேண்டுகிறேன்.இதனால் நம் இருவருக்கும் பலன் உண்டு என நம்புகிறேன்.
தருதல் பெறுதல்   வளர்ச்சிக்கு உதவும்.
கோ.சுரேந்திரபாபு  செல்பேசி 9444468670