Monday, 28 December 2015

மக்களோடு பேசு

 மக்கள் பலவகையான துறைகளில் மனம் நாட்டம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.அவர்களிடம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் அரசியல் மட்டுமே பேசுவது அவர்கள் முழுவதுமாக கவனிப்படதில்லை.மக்களின் அன்றாட வாழ்வில் நிலவும் அனைத்திலும் மார்க்சியவாதிகள் கலந்துறவாட வேண்டும்.அவர்களின் பேச்சை கேட்கும் செவிகளும் நமக்கு தேவை.அதுவே மக்களின் நட்பை வளர்க்கும்

Thursday, 24 December 2015

படைப்பாளிகளுக்கான இலக்கணமும் இலக்கும்



படைப்பாளிகளுக்கான இலக்கணமும் இலக்கும்                கோ.சுரேந்திரபாபு. செல்பேசி 9444468670
 வெள்ளத்தில் மிதந்து தவித்த மக்களைப்பற்றிய கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் மற்றும் பாடல்கள் பல வந்துள்ளன.அவை மனதை உருக வைக்கிறது. இதை படித்தும் கேட்டும் உணர்ந்த  ஒருவர் இதற்குரிய தீ்ர்வு இட்லர் ஜெயலலிதாவை அகற்றிவிட்டு கலைஞரை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றும்,.இன்னொருவர் புரட்சித்தலைவி அம்மா, கலைஞரை விட பலமடங்கு மேலானவர் அம்மா எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார் என்கிறார்..இரண்டும் வேண்டாம் எங்களை ஆட்சியில் அமர்த்திப்பாருங்கள் நாங்கள் தூய்மையானவர்கள் ஊழலற்ற ஆட்சியைத்தருவோம் என்று ஒரு குரல் கேட்கிறது.எதுவானாலும் தெருவைப்பற்றியும் ஊரைப்பற்றியும், நாட்டைப்பற்றுயும் அக்கரையோடு கூடிப்பேசி நல்லதுக்காக கூட்டமாக சண்டையிட மக்கள் தயார்நிலைக்கு வராதவரையில் எத்தனை படம் ,பாடல் படப்புகள் வந்தாலும் பயனில்லை.
                 பல படைப்புகள் சமூக சீர்குலைவைப்பற்றி தகவல்களையும் புள்ளிவிவரங்கள் மற்றும் சீர்குலைவுக்குக் காரணமான மனிதர்களைப்பற்றிய குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு தெரிவிக்கின்றன. அந்த தகவல்கள் மக்களின் மூளையில் பதிவாகிறது.அவை உண்மைதான் என்று மக்களும் ஒப்புக்கொண்டு  என்ன செய்வது யாராவது வந்து இதை சரி செய்ய வேண்டும் என் புலம்புகின்றனர்
        இன்னொரு முறை காந்தி பிறக்க வேண்டும்.இந்த நாட்டிற்கு சர்வாதிகாரம் தான் தேவை, பேசாமல் வெள்ளைக்காரனிடமே நாட்டை கொடுத்துவிடலாம் நம்ம ஊர் திருடன்களைவிட அவனே மேல் எனவும் பிதற்குகின்றனர்.
        வாழ்க்கை சுகங்களை இழந்து விட்டு கவலையை சுமக்கும் மனிதர்களுக்கு கோபம் வரவேண்டும்.இது என் நாடு என் உலகம் இந்த சமூகத்தில்  என் உழைப்பாற்றலை மக்களோடு நானும் ஒருவனாக தருகிறேன்.  இதில் நான் நிறைவுடன் வாழ உரிமை எனக்கும் உள்ளது என்ற ஆவேசத்தோடு சண்டைபோடும் ரோஷம் வர வேண்டும்
          தன் சாதியை எவனாவது பழித்து பேசினால் இயற்கையான ஆத்திரம் நரம்புகளில் புடைத்துக்கொண்டு வருகிறது. அந்த உணர்வை யார் கற்றுத்தந்தார்கள் அவர்கள் எந்த மொழிவடிவில் அதை உடலின் நரம்புகளில் ஏற்றினார்கள் என்பதை கவிஞர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூக சீர்குலைவுகள் நடப்பதைப்பார்த்து மக்களுக்கு  ஆவேசமோ ஆத்திரமோ வருவதில்லை சகித்துக்கொள்கிறார்கள்.                                 .                 தகவல்களையும் உண்மைநிலைகளைப்பற்றி   தகவல்களாக வெளிப்படுத்துவது பலனளிப்படதில்லை.கலைநயத்தோடு  குறுகிய அளவில் வெளிப்படுத்தினாலும் அது சமூக உணர்வைத் தூண்டும் வடிவில் படைப்புகள் இருக்க வேண்டும்.
        சாலைகள் போடவும் வீதி தூய்மைப்படுத்தவும் அடிப்படை வாழ்வாதார உடைமைகள் நான் அனுபவிக்கும் உரிமையும் எனக்குள்ளது . அந்த ஏற்பாடுகளை செய்யத்தான் அரசுக்கு நான் வரி கொடுக்கிறேன்.அவை முறையான மக்களுக்கு தராமல் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் அரசின் செயலை உணர வைக்க  வேண்டும்.அரசாங்கத்திடம் கேட்க வேண்டியதை மக்கள் கடவுளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்
       கலை இலக்கியப்படைப்புகள் உணர்ச்சியை தொட்டு உணர்வுப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அந்த தூண்டுதல் அறிவியல் அடிப்படையில் ஒட்டு மொத்த சமூகநலனுக்கான கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும்.சமூகநல அக்கரையோடு பொதுவில் கூடி பேசி திட்டமிட்டு செயல்லபடும் நிலை உருவாக்க நமது படைப்புகள் இருக்க வேண்டும்.