Thursday, 10 December 2015

வெள்ளச்சேதத்திற்கு ஜெயல லிதாதான் காரணம் 11-12-15

சென்னை என்ற ஒரு நகரம் ஜெயலிலதா முதல்வராக ஆன பிறகுதான் உருவானது போலவும் அனைத்து சீரழிவிற்கும் அந்த ஒரு தனிமனிதரின் அகம்பாவம் தான் காரணம் என்ற வித த்தில் வரும் கருத்து தவறானதாகவே பார்க்கிறேன்.கருணாநிதி முதல்வராக இருந்த போதும் சென்னை இப்படித்தான் பராமரிக்கப்பட்டது.என் சொந்த அனுபவம் .சாலைகளை சரியாக போட வேண்டும் என்றும் நீர் நிலை பராமரிப்புகள் பாதுகாப்பு தொடர்பாக கம்யூனிஸ்ட் தோழர்கள் தெருவில் நின்று போராட்டம் நடத்தி அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க முயன்ற தருணங்களில் அந்த பொது நல சமூக போராட்டத்தில் மிகச்சிலரே பங்கேற்பதை பார்த்துள்ளேன்.திமுக , அதிமுக இரண்டு கட்சியும் ஆட்சியில் இருப்பவரை பழிவாங்கி பதவியிலிருந்த அகற்ற வேண்டும் என்ற உணர்ச்சியும் செயலும் மட்டும் உள்ளது. மற்றவர்கள நாங்கள் நல்லவர்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என நிரூக்க முயல்கிறார்கள்.இப்போதும் அறிவியல் வல்லுநர்கள் நிபுணர்களின் கருத்து உட்கொண்ட அரசியல் கூட்டணி நகரின் புணரமைப்புக்கு நகர திட்டம் வரைந்து வெளியிட வேண்டும். அதில் மக்கள் விழப்புணர்வோடு நிறைவேறும் வரையில் உறுதியாக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். . எவரையாவது பழிவாங்க வேண்டும் என்று மாறி மாறி பேசுவது பயனற்றது.தமிழ்நாட்டில் சினிமா அரசியல் விளையாட்டு ரசிகர்களாக மட்டும மக்கள் இருக்கிறார்கள் அரசியல் போரில் பங்கேற்பதில்லை.
LikeReply42 hrsEdited
Rajalakshmi Mohan அருமை யான பதிவு. வாழ்த்துக்கள்.
LikeReply31 mins

No comments:

Post a Comment