Monday, 7 December 2015

வெள்ளத்தில் வந்த ஒரு சொட்டு கருத்து

மின்சாரம் துண்டிக்கப்பட்டது.குடிக்க தண்ணீர்.இல்லை.பால் கிடையாது டெலிபோன் வேலை செய்யவில்லை.செல் போன் டவர். இல்லை.டீவி இல்லை. இண்டர்நெட் கிடையாது. மெழுகு வத்தி காலி. .அமைதியான அகல் விளக்கு வெளிச்சத்தில் மனைவி பரிமாறினார் . சூடாக சமைத்த ரசம் சாதம் ஆவி பறக்க சாப்பிட்டோம்.அந்த அமைதியில் எங்கள் குரல்களை தெளிவாக கேட்டு உணர்ந்தோம் .
மூன்று நாட்கள் இந்த அமைதி சூழலை அனுபவிக்க வைத்த மழைவெள்ளத்திற்கு நன்றி.
அடுத்தநாள் மின்சாரம் வந்துவிட்டது. செல்பேசி இயங்குகிறது நெட் வேலைசெய்கிறது.எல்லாம் வந்துவிட்டது.வீட்டை சுற்றி தண்ணீர் நிற்கிறது
இப்போது ஒரு மகள் மாடிப்படியில தனியாக அமர்ந்து செல்போனில் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.அடுத்த மகள் கம்யூட்டர்முன்னால் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள் வீடு அமைதியை இழந்தது.டீவி முன்னால் மனைவி அமரந்துவிட்டாள்.வீடு சிதறிப்போன உறவுகளாகி இரைச்சல் உலகமாக ஒலிக்கிறது.மழை வெள்ளமே நீ தந்த படிப்பினை அனுபவம் எனக்குமட்டுமே.மக்கள் பலர் உணவின்றி உறக்கமின்றி ஓலமிடுவதும் என்மனக்பண்ணில் தெரிகிறது.. நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்கள அத்தனை திட்டத்தையும் அமல் படுத்தாமல் அப்படியே விழுங்கி ஒற்றுமையாக சொத்து சேர்த்திருக்கிறார்கள் .மக்கள் குருடர்களாகவும் ஊமைகளாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்திய மழையே உனக்கு நன்றி .போதும் போய் வா
Comments
Usha Kumari பதய கண்டு பிடிப்புகளும் வளர்ச்சியும் வர வர மனிதம் தனிமைபட்டு போனது நிஜம்
Pattabi Raman உணர்வுபூர்வமான நடைமுறை! வாழ்த்துக்கள்!
Nagendra Babu Nooru sathaveedha Unmai uravugal inaya Tholai thodarbugal thundipu avasiyam
Yoganandan Veera This writeup is worth publishing in a magazine.very nice.
Surendra Babu
Write a comment...

No comments:

Post a Comment